சிவகாசியில் மிலாது நபி கொண்டாட்டம்

சிவகாசி, நவ. 23;சிவகாசி ஷாபாஸ்கான் கோரி பள்ளி வாசலில் மிலாது நபி விழா கொண்டாடப்பட்டது. காலையில் ஊர்வலம் ரீப் நிகழ்ச்சி நடந்தது. ஷாபாஸ்கான் கோரி பள்ளி வாசல் உறுப்பினர் செய்யது முஸ்தபா, செயலாளர் செய்யது ஜஹாங்கீர் தலைமை வகித்தனர். இமாம் தெற்கு பள்ளிவாசல் இமாமுதீன் தீன்கொடி ஏற்றினார். பின்னர் அனைவரும் மீலாது ஊர்வலம் சென்றனர். பள்ளிவாசல் பொருளாளர் இக்பால், செய்யது யூசுப், அப்துல்ரஹ்மான், சேக் அப்துல்லா முன்னிலை வகித்தனர். பள்ளிவாசல் உறுப்பினர் முகம்மது காசீம் இப்ராஹிப், செய்து அபுதாஹிர், அப்துஸ்ஸமது வரவேற்றனர். நாகப்பட்டினம் பைஜூல் ஹஸனாத் அரபிக் கல்லூரி முதல்வர் ஜூபைர் அஹ்மத் பேசினார்.

Related Stories: