சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தவறாக வழிநடத்துகிறது விஎச்பி பொதுச் செயலாளர் குற்றச்சாட்டு

மதுரை, நவ. 23: சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தவறாக வழிநடத்துகிறது என விஎச்பி பொதுச் செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

 விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் அகில உலக பொதுச் செயலாளர் மிலிந்த் பரண்டே செய்தியாளர்களிடம் கூறியதாவது, ராமர் கோயில் கட்டும் வழக்கு கடந்த 1949ல் இருந்து நடக்கிறது. தீர்ப்பு விரைவில் வரும் என எதிர்பார்த்த நிலையில், உச்சநீதிமன்றம் ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது. தீர்ப்புக்காக காத்திருக்க முடியாது.

 தற்போதைய தீர்ப்புகள் தேச தர்மத்திற்கு விரோதமாக உள்ளன. ராம ஜென்ம பூமியை வலியுறுத்தி வரும் டிசம்பரில் பெங்களூருவில் மாநாடு நடத்தவுள்ளோம். சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தவறாக வழி நடத்துகிறது. நிரந்தர தீர்வு கிைடக்கும் வரை இந்து அமைப்புகள் தொடர்ந்து போராடும் என்றார். இந்த நிகழ்ச்சியில் சின்மயா மிஷன் சுவாமி சிவ யோகானந்தா மற்றும் அகில பாரத துறவியர் சங்கச் செயலாளர் சுவாமி அபிராமானந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: