திருச்செங்கோட்டில் இன்று ₹486 ேகாடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டங்கள் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்

நாமக்கல், நவ.16: திருச்செங்கோட்டில் இன்று ₹486 கோடியில் புதிய குடிநீர் திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், இன்று (16ம் தேதி) மாலை 5 மணிக்கு ₹399 கோடியில் திருச்செங்கோடு, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 669 ஊரக குடியிருப்புகள், ஆலாம்பாளையம் பேரூராட்சி, படவீடு, சங்ககிரி பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டு விழா மற்றும் ₹87 கோடியில் திருச்செங்கோடு நகராட்சிக்கான குடிநீர் அபிவிருத்தி திட்ட அடிக்கல் நாட்டு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தலைமை வகிக்கிறார். கலெக்டர் ஆசியாமரியம் வரவேற்று பேசுகிறார்.

விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூட்டுகுடிநீர் திட்டம், குடிநீர் அபிவிருத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசுகிறார். விழாவில் 1,706 பயனாளிகளுக்கு ₹8.13 கோடியில் அரசு  நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் வேலுமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, நாமக்கல் எம்பி சுந்தரம், எம்எல்ஏக்கள் பொன்.சரஸ்வதி, பாஸ்கர், சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். குடிநீர் வடிகால் வாரிய கோவை மண்டல தலைமை பொறியாளர் ஜெயசீலன் நன்றி கூறுகிறார்.

Related Stories: