கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் ஸ்டிரைக்

ஈரோடு, நவ. 16: கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாள் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதென ஈரோட்டில் நடந்த அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம் நேற்றுமுன்தினம் ஈரோட்டில் ஏஐடியுசி அலுவலகத்தில் நடந்தது.இக்கூட்டத்திற்கு எல்பிஎப் மாவட்ட கவுன்சில் செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார். சென்னையில் நடந்த மாநில அனைத்து சங்க முடிவுகள் குறித்து ஏஐடியுசி மாநிலச் செயலாளர் சின்னசாமி விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: மத்திய பாஜ அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, கொள்கைகளை கண்டிப்பது, விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும், தொழிலாளர் சட்டங்களை அமலாக்க வேண்டும், தொழிலாளர் சட்டங்களை தொழிலாளர்களுக்கு எதிராக திருத்துவதை கைவிட வேண்டும்,

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது, அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தேசிய நிதியத்தை உருவாக்கி, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச சம்பளமாக மாதம் ரூ.21 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி மாதம் 8 மற்றும் 9 ஆகிய இரண்டு நாள் அகில இந்திய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்பது, அனைத்து சங்கங்கள் சார்பில் ஈரோட்டில் வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டை 28ம் தேதி ஈரோடு பெரியார் மன்றத்தில்  நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கடாசலம், சிஐடியு மாவட்ட தலைவர் ஹீராம், எல்பிஎப் கோபால், ஏஐசிசிடியு மாநில செயலாளர் கோவிந்தராஜ், ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் தங்கராஜ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: