திருத்துறைப்பூண்டி அருகே தனந்தாங்கி அரசு துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா திமுக எம்எல்ஏ ஆடலரசன் பங்கேற்பு

திருத்துறைப்பூண்டி, நவ.15: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தனந்தாங்கிஅரசினர் துவக்கப்பள்ளியில் குழந்தைகள்தினவிழா கொண்டாடப்பட்டது. இதில் திமுக எம்எல்ஏஆடலரசன்  பங்கேற்று மாணவமாணவிகளுக்கு இனிப்பு வழங்கி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.  மேட்டுப்பாளையம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த குழந்தைகள்தினவிழா சிறப்பு நிகழ்ச்சியில்  சர்க்கரை நோய்கண்டறியும் முகாம், நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி, கண்பரிசோதனை முகாம், மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் பசித்தோருக்கு உணவு வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது இதில் மேட்டுப்பாளையம் லயன்ஸ்சங்கசாசனதலைவர் ஜாகிர் உசேன், செயலாளர் பிரசன்னா, மாவட்டதலைவர் அடைக்கலசாமி, பள்ளிதலைமைஆசிரியை கோமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: