கஜா புயல் எச்சரிக்கை மத்திய ரிசர்வ் போலீஸ் படை முக்கிய வீதிகளில் அணிவகுப்பு

உத்தமபாளையம், நவ.15: கஜாபுயல் பாதிப்பு, திடீர் கலவரங்கள் ஏற்பட்டால் மக்களைப் பாதுகாக்கும் வகையில் மத்திய ரிசர்வ்போலீஸ் படையினர் முக்கிய வீதிகளில் அணிவகுப்பு நடத்தினர். உத்தமபாளையம் பகுதிகளில் கஜா புயல் ஏற்பட்டால் ஏற்படக்கூடிய பாதிப்புகளால் மக்கள் அச்சப்படாமல் இருக்கும் வகையிலும், புயல், வெள்ளங்களால் மிகவும் பள்ளமான இடங்களில் ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகளால் உண்டாகும் அபாயங்களில் இருந்து மக்களை பாதுகாத்திடவும், திடீர் கலவரத்தால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்னையை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் இருந்து மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் 36 பேர் உத்தமபாளையம் வந்துள்ளனர்.

நேற்று காலை இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் மற்றும் உத்தமபாளையம் காவல்நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் முக்கிய வீதிகளான கிராமச்சாவடி, மெயின்ரோடு, வழியாக சென்றனர். இவர்களுடன் வஜ்ரா வாகனம், மற்றும் பேரிடர் மீட்பு வாகனம் போன்றவை சென்றன. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, `` அவசர காலங்களில் உதவுவதற்காகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் ரேபிட் ஆக்ஷன் போர்ஸ் மிக துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும். இதற்காக நேற்று அணிவகுப்பு நடத்தப்பட்டது’’ என்றனர்.

Related Stories: