கரும்பு, வெல்லத்துக்கு போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

பாபநாசம்,  நவ. 2: பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே மணலூர், வீரமாங்குடி, தேவன்குடி,  சோமேஸ்வரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் கரும்பு சாகுபடி  நடந்து தற்போது அறுவடை பணி நடந்து வருகிறது. ஆனால் கரும்பு, வெல்லத்துக்கு  போதுமான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து  மணலூர் பகுதியை சேர்ந்த முன்னோடி விவசாயி பாஸ்கர் கூறுகையில்,  தேர்தலின்போது டன்னுக்கு ரூ.3,000 விலை நிர்ணயம் செய்வதாக வாக்குறுதி  தரப்பட்டது. ஆனால் தற்போது கரும்பு டன்னுக்கு ரூ.2,650 மட்டுமே  கிடைக்கிறது. உரம் டிஏபி ஒரு மூட்டை பழைய விலை ரூ.1,125 ஆக இருந்தது.  தற்போது ரூ.1,450ஆக உயர்ந்து விட்டது. இதேபோல் வேலையாட்கள் கிடைப்பதில்லை.  தற்போது நடவுப்பணி நடைபெறுவதால் வேலையாட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு  உள்ளது. வெல்லத்துக்கு தட்டுப்பாடு இருந்தும் போதுமான விலை கிடைக்கவில்லை.  இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர் என்றார்.

2வது நாளாக தொடர் வேலைநிறுத்தம்

Related Stories: