விபத்தில்லா தீபாவளி கந்தர்வகோட்டை அரசு பள்ளியில் தீயணைப்பு துறை செயல்விளக்கம்

கந்ர்வகோட்டை, நவ.1: தீபாவளி பண்டிகை வரும் 6ம்தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில் கந்தர்வகோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில்லா தீபாவளி எவ்வாறு கொண்டாடுவது என செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.    கந்தர்வகோட்டை நிலைய அலுவலர் ஆரோக்கியச்சாமி தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு அலுவலர்கள் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு செயல்முறை விளக்கமளித்தனர். தீபாவளி அன்று எவ்வாறு வெடிகள் வெடிப்பது, ஆயில் சட்டியில் தீப்பிடித்தால் எவ்வாறு தீயை அணைப்பது, கம்பி மத்தாப்புக்களை கொழுத்திவிட்டு எவ்வாறு அணைத்து அப்புறப்படுத்துவது, தீ புண் ஏற்பட்டால் குளிர்ந்த தண்ணீரால் கழுவ வேண்டும் என்பனகுறித்து மாணவிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

  அரசினர்  பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை உமாதேவி மற்றும் உதவி ஆசிரியர் சசிகுமார்  நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர். அனைத்து வகுப்பு மாணவிகள் செயல்முறை விளக்கத்தை கண்டுகளித்தனர்.

Related Stories: