குன்றத்தில் சஷ்டி விழா நவ.8ம் தேதி துவக்கம்

திருப்பரங்குன்றம், நவ.1: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ.8ம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்குகிறது. முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நவ.8ம் தேதி கந்தசஷ்டி விழா துவங்கின்றது.  அன் காப்பு கட்டுதலுடன்  துவங்கும் விழா நவ.14ம் தேதி வரை நடைபெறும். சஷ்டியின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.13ம் தேதியும் சூரனை வதம் செய்வதற்காக வேல் வாங்கும்  நிகழ்ச்சி நவ.12ம்  தேதியும் நடைபெறும். வழக்கமாக தீபாவளி திருநாளிற்கு அடுத்தநாள் துவங்கும்  கந்தசஷ்டி விழா, இந்த ஆண்டு தீபாவளி முடிந்த இரண்டாம்  நாள் துவங்குகின்றது.   விழாவிற்கு காப்பு கட்டும் பக்தர்களுக்கு கட்டணமாக ரூ.35 வசூலிக்கப்படும்.

இந்த ஏழு நாட்களும்  பக்தர்கள்  கோயிலில்  தங்கியிருந்து தினமும் சரவணப் பொய்கையில்  நீராடி விரதம் இருப்பார்கள்.  இந்த நாட்களில் பக்தர்களுக்கு தேன், சுக்கு கலந்த தினை மாவு, பால் உள்ளிட்டவை வழங்கப்படும்.  விழா ஏற்பாடுகளை  கோயில்  துணை ஆணையர் மாரிமுத்து (பொறுப்பு) மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.

Related Stories: