பள்ளியை சுற்றி மழைநீர் தேக்கம் மாணவர்களுக்கு டெங்கு அபாயம் மாநகராட்சி நடவடிக்கையால் வியாபாரிகள் அதிர்ச்சி

பேரையூர், நவ.1:  அரசுப்பள்ளியை சுற்றிலும் மழைநீர் தேங்கி கிடப்பதால் கொசுக்கடியால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். இவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. பேரையூர் தாலுகா, சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது காளப்பன்பட்டி. இந்த கிராமத்தில் அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளி உள்ளது. பள்ளிக்கூடத்தை சுற்றிலும் மழைத்தண்ணீர் தேங்கியுள்ளது. கடந்த 2 மாதங்களாக இந்த தண்ணீர் தேங்கி கிடப்பதால் துர்நாற்றம் அடிக்கிறது. கொசு உற்பத்தியாகி பகலிலேயே கொசுக்கடியால் பள்ளிக்குழந்தைகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதியில் வைரஸ் காய்ச்சல் பரவி பொதுமக்கள் சிலர் நோயாளிகளாக உள்ளனர். இந்த நிலையில் பள்ளிக்குழந்தைகள் தொற்று நோய் மற்றும் டெங்கு பரவும் அச்சத்தில் உள்ளனர். பெற்றோர்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பவே பயப்படுகின்றனர். எனவே பள்ளி வளாகத்தில் தேங்கிய தண்ணீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: