விவசாயிகளாக மாறிய மாணவர்கள்

உசிலம்பட்டி, நவ.1: உசிலம்பட்டி அருகே பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் வயலில் இறங்கி நாற்று நடவு செய்தனர். உசிலம்பட்டியில் அரசு உதவி பெறும் நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி மாணவர்கள் விவசாய நிலங்களில் நெல் நடவு செய்வதை கற்றுக்கொள்வதற்காக, பசுக்காரன்பட்டி கிராமத்திற்கு களப்பயணம் மேற்கொண்டனர். அங்கு கருப்பு என்ற விவசாயி மாணவர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். இதையடுத்து மாணவர்கள், ஆசிரியர்கள் நாற்று நடவு செய்தனர். இதில் தலைமை ஆசிரியர் மதன்பிரபு, ஆசிரியர்கள் மதுமதி, செல்வி, சந்தோஷ் ஆகியோருடன் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: