திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியர் பள்ளியில் நிலவேம்பு கசாயம் வழங்கல்

திருத்துறைப்பூண்டி, அக்.25: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி தூய அந்தோணியர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.பள்ளி தாளாளர் வின்சென்ட் ஆரோக்கியராஜ் வரவேற்றார். நகராட்சி ஆணையர் நாகராஜன் இங்கு பயிலும் 2,500 மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கினார். இதில் சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து நகரிலுள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என்று நகராட்சி ஆணையர் நாகராஜன் தெரிவித்தார்.

Related Stories: