ஆவடி, அக்.25: ஆவடி, திருநின்றவூர் அம்பத்தூர், தாம்பரம் வேளச்சேரி ஆகிய இடங்களில் கிருஷ்ணா ஹார்டுவேர்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் மூலமாக கட்டுமான வேலைகளுக்கு பொருட்கள் சப்ளை மற்றும் வீடுகளுக்கு போர்வெல் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன. இதனை அடுத்து, வருமான வரித்துறை இணை கமிஷனர் நடராஜன் தலைமையில் அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் இரவு மேற்கண்ட இடங்களில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.