பிளஸ் 1 பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் 85.54 % மாணவர்கள் தேர்ச்சி

திருவள்ளூர், மே 15: பிளஸ் 1 பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் 85.54 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 4ல் தொடங்கி தொடர்ந்து 25ம் தேதி வரையில் நடைபெற்றது. இதனையடுத்து பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இத்தேர்வில் திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவில் மொத்தமுள்ள 244 பள்ளிகளை உள்ளடக்கிய 105 தேர்வு மையங்களில் மாணவர்கள் 13381 பேரும், மாணவிகள் 14868 பேரும் என மொத்தம் 28249 பேர் தேர்வு எழுதினர்.

இதில் மாணவர்கள் 10636 பேரும், மாணவிகள் 13529 பேரும் என மொத்தம் 24165 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாவட்ட அளவில் மாணவர்கள் 79.49 சதவீதம் தேர்ச்சியும், மாணவிகள் 90.99 சதவீதம் தேர்ச்சியும் என மொத்தம் 85.54 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 102 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 6306 பேரும், மாணவிகள் 7503 பேரும் என மொத்தம் 13809 தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்கள் 4046 பேரும், மாணவிகள் 6381 பேரும் என மொத்தம் 10427 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 64.16 சதவீதமும், மாணவிகள் 85.05 சதவீதமும் என மொத்தம் 75.51 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் தெரிவித்தார். தமிழகத்தில் குறைந்த சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற மாவட்டத்தில் திருவள்ளூர் மாவட்டமும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post பிளஸ் 1 பொதுத் தேர்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் 85.54 % மாணவர்கள் தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: