பெரியகுளம் ஏலாவில் ஆக்ரமிப்புகளை அகற்ற கோரிக்கை

நாகர்கோவில், அக்.23: லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு பேரூராட்சிகள், தலக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பெரியகுளம் உள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தின்  தண்ணீரை நம்பி சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் நடைபெறுகிறது. தற்போது இந்த குளம் சுருங்கி 80 ஏக்கராகியுள்ளது. பலர் பெரியகுளத்தின் கரையை ஆக்ரமித்து தென்னை மரங்கள் நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.

இந்த நீர்நிலைகளில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றிட சென்னை, மதுரை உயர்நீதிமன்றம் ஆகியவை பல உத்தரவுகளை பிறப்பித்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே  கலெக்டர் எதிர்கால விவசாயத்தின் நலன் கருதி பெரியகுளத்தின் ஆக்ரமிப்புகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: