குஜிலியம்பாறையில் பழுதடைந்த காலனி வீடுகளுக்கு பராமரிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தி மனு அளித்தனர்

குஜிலியம்பாறை, அக். 17: குஜிலியம்பாறை ஒன்றியத்தில் பழுதடைந்த காலனி வீடுகளை மராமத்து செய்து பராமரிக்க வேண்டும் என ஏபிடிஓவிடம் மனு அளிக்கப்பட்டது.

குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் முத்துச்சாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் குஜிலியம்பாறை ஒன்றியத்தில் பழுதடைந்த காலனி வீடுகளை உடனே மராமத்து செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் கட்டப்படும் காலனி வீடுகளுக்கு ரூ.3 லட்சம் உயர்த்தி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து கோரிக்கை மனுவை ஏபிடிஓ முத்துக்குமரனிடம் அளித்தனர். அதனை பெற்ற ஏபிடிஓ கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதில் மாவட்ட துணை தலைவர் ராஜரத்தினம், ஒன்றிய செயலாளர் கார்மேகம், துணை தலைவர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: