திருத்துறைப்பூண்டி ஒன்றிய அளவிலான அறிவியல் கண்காட்சி

திருத்துறைப்பூண்டி, அக். 16: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளியில் ஒன்றியஅளவிலானஅறிவியல் கண்காட்சி நடைபெற்றது. தலைமையாசிரியர் ரகுராமன் வரவேற்றார்.வட்டாரகல்வி அலுவலர் இன்பவேணி கண்காட்சியை திறந்துவைத்தார். வட்டார மேற்பார்வையாளர் சூசைரெத்தினம் முன்னிலைவகித்தார். 23 பள்ளிகளை சேர்ந்த அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் இடம்பெற்றன.அதில் முதல் இடத்தை பள்ளங்கோயில் பள்ளியும், இரண்டாவது இடத்தை பிச்சன்கோட்டகம் வடக்கு பள்ளியும், மூன்றாவது இடத்தை திருத்துறைப்பூண்டி  பள்ளியும் பெற்றன. வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கவியரசன், பாலாஜிநடுவர்களாக செயல்பட்டனர்.

Related Stories: