நெடும்பலம் அரசு பள்ளியில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா

திருத்துறைப்பூண்டி, அக்.16: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில்  திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரிசங்கம் சார்பில் டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள்விழா இளைஞர் எழுச்சிநாள்விழா மற்றும் அறிவியல் திருவிழா தலைமையாசிரியர் தங்கராசு தலைமையில் நடைபெற்றது. உதவிதலைமையாசிரியர் தனபாலன் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் சோமநாதன், துணைத்தலைவர் யூசுப் முன்னிலை வகித்தனர்.பள்ளியில் நடைபெற்றஅறிவியல் கண்காட்சியை டெல்டா ரோட்டரிசங்கதலைவர் சீனிவாசன் தொடக்கிவைத்தார்.

பின்னர் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை டெல்டா ரோட்டரிசங்க செயலாளர் காளிதாஸ், பொருளாளர் பாலமுருகன் தொடங்கி வைத்தனர். பேரணியானது நெடும்பலம் கடைத்தெரு, பண்ணைத்தெரு, திருவள்ளுவர் நகர் மற்றும் முக்கியவீதிகள்வழியாகச் சென்றுபள்ளியைஅடைந்தது. மாணவர்கள் விழிப்புணர்வு பாதகைகளை ஏந்திச்சென்றனர். பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மாலையில் அப்துல் கலாமின் அறிவியல் சிந்தனைகள் குறித்து கட்டிமேடு அரசு மேல்நிலைப்பள்ளிஆசிரியர் பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். பின்பு திருத்துறைப்பூண்டி வெங்கடேசன் புல்லாங்குழல் கச்சேரியும் அதனைத் தொடர்ந்து மாணவர்கள்விஜய்யானந்த், ஜோவில்டோம்னிக், ஜோகன் இன்பண்ட் ஆகியோரின் கீபோர்டு இன்னிசைநிகழ்ச்சியும் நடைபெற்றது.முடிவில் ஆசிரியர் யோகராசன் நன்றிகூறினார்.

Related Stories: