காரையூர் பகுதியில் பட்டா வழங்குவதில் முறைகேடு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை, அக். 16 : புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை  தீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கலெக்டர் கணேஷ் தலைமை  வகித்து மனுக்களை பெற்றார். அப்போது பொன்னமராவதி தாலுகா காரையூர் ஊராட்சி சங்கரன்பட்டியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:   சங்கரன்பட்டி கிராமத்தில் சங்கரன் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பிலான மண்ணை வெட்டி எடுத்து பொன்னமராவதி தாசில்தார் செங்கல் சூளைகளுக்கு விற்பனை செய்து உள்ளார். இது குறித்து தாசில்தார் மற்றும் காரையூர் வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தும் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் தாசில்தார் பொன்னமராவதி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இடைத்தரகர்களை வைத்து கொண்டு பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் வாங்குவது, அரசு புறம்போக்கு நிலங்களை பணம் கொடுக்கும் நபர்களுக்கு பட்டா போட்டு கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். எனவே இது குறித்து கலெக்டர் விசாரணை நடத்தி தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: