பட்டுக்கூடு விலை தொடர்ந்து சரிவு

கோவை, அக்.12: பட்டுக்கூடு விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. கோவை பட்டுக்கூடு விற்பனை மையத்தில் நேற்று நடந்த விற்பனைக்கு கோவை மற்றும்  திருப்பூர்  மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 1,609 கிலோ பட்டுக்கூடுகளை  விற்பனைக்கு கொண்டு வந்தனர். இவற்றை வியாபாரிகள் மற்றும் பட்டுநூல்  கூட்டுறவு சங்கத்தினர் கொள்முதல் செய்தனர்.

நேற்றைய விற்பனையில்  பட்டுக்கூடு  குறைந்தபட்ச விலை கிலோ ரூ.223 ஆகவும், அதிகபட்ச விலை ரூ.320 ஆகவும், சராசரி விலை ரூ.277 ஆகவும் இருந்தது. பட்டுக்கூடு சராசரி விலை முந்தைய விலையை விட கிலோவிற்கு ரூ.2 சரிந்துள்ளது. பட்டுக்கூடு விலை தொடர்ந்து சரிந்து வருகிறது, உற்பத்தி செலவில் பாதியளவிற்கு கூட விலை கிடைப்பதில்லை, என்கின்றனர் விவசாயிகள்.

Related Stories: