அதிக மாணவர்களை சேர்த்த 1700 சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு இந்தியா முழுவதும் விதிகளை மீறி

வேலூர், அக். 12: இந்தியா முழுவதும் விதிகளை மீறி அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்த சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிபிஎஸ்இ போர்டு அங்கீகாரம் பெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளில் ஒரு வகுப்புக்கு 40 மாணவர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளி விவரங்களை பதிவு செய்யும் ஆன்லைன் நடைமுறை மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் நாடு முழுவதும் 1700 சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்புகளில் ஒரு வகுப்புக்கு 50 முதல் 80 மாணவர்கள் வரை படித்து வருவதாக தெரியவந்தது.இதையடுத்து, அதிக மாணவர்களை சேர்த்த 1700 சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவதுடன், ஒரு மாணவருக்கு ₹500 வீதம் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கவும், பின்னர் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: