திருப்பதி பிரம்மோற்சவத்திற்குபழநியில் இருந்து 10 டன் பூக்கள் பயணம்

பழநி, அக். 9: திருப்பதியில் நடைபெறும் நவராத்திரி பிரம்மோற்சவத்திற்கு பழநியில் இருந்து 10 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. ஆந்திர மாநிலம், திருப்பதியில் 18ம் தேதி வரை நவராத்திரி பிரமோற்சவ விழா நடைபெறுகிறது. இவ்விழாவிற்கு பழநியில் உள்ள புஷ்ப கைங்கர்ய சபா அமைப்பின் சார்பில் வருடந்தோறும் டன் கணக்கில் பூக்கள் அனுப்பி வைக்கப்படும். திண்டுக்கல் வழியாக திருச்செந்தூரில் இருந்து திருப்பதிக்கு செல்லும் பஸ்சில் இந்த பூக்கள் நாள்தோறும் அனுப்பி வைக்கப்படும். நேற்று பழநி மாரியம்மன் கோயிலில் இருந்து பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் சார்பில் 1 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மஞ்சள் செண்டு மல்லி, வெள்ளை நிற செண்டு மல்லி, அரளி, மருகு,  மரிக்கொழுந்து, செண்பகம், கனகாம்பரம், தாமரை, பட்டு, வாடாமல்லி, விரிச்சி  உள்ளிட்ட வகைகளை சேர்ந்த 1000 கிலோ பூக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இதில்  பழநி கோயில் கண்காணிப்பாளர் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதுகுறித்து புஷ்ப கைங்கர்ய சபா நிர்வாகி மருதசாமி நிருபர்களிடம் கூறியதாவது,    திருப்பதி நவராத்திரி பிரமோற்சவத்திற்கு புஷ்ப கைங்கர்ய சபா அமைப்பின் சார்பில் இந்த வருடம் சுமார் 10 டன் பூக்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. இதற்காக ஒசூர், நிலக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் பெறப்பட்டு வருகின்றன. பூக்கள் அனுப்பி வைக்க விரும்புபவர்கள் 94434 03026 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்’’ என்றார்.

Related Stories: