பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

 மதுரை மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவியர் சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. பேரணியை கல்லூரி முதல்வர் வானதி தொடங்கி வைத்தார்.பேரணியில், ‘பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிப்பதால் ஏற்படும் விளைவு, கழிவறை கட்டுதல், நீர்நிலைகளை பாதுகாத்தல், மரம் வளர்த்தல் உள்ளிட்டவைகளை வலியுறுத்திய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவியர் கைகளில் ஏந்தி சென்றனர்.கல்லூரியில் தொடங்கிய பேரணி வைகை கரையோரம், எல்ஐசி ரோடு, செல்லூர், தேவர் சிலை வழியாக வந்து மீண்டும் கல்லூரியில் முடிவடைந்தது. இதில், 250க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி கணினி துறை பேராசிரியர் பெரி.கபிலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Related Stories: