நாட்டு நலப்பணி தின விழா

மேலூர், செப். 25: மேலூர் அருகே, மேலவளவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட தினம் மற்றும் பள்ளி பொன்விழா நேற்று கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் மாரிமுத்து தலைமை வகித்தார். ஆசிரியர் சண்முகவேல் வரவேற்றார்.

விழாவில், ஸ்டார் சென்டர் நிறுவன இயக்குநர் டாக்டர் வில்லியம்ஸ், சேக்கிபட்டி சர்.சி.வி.ராமன் அறிவியல் மற்றும் தொழில் நுட்பமைய ஒருங்கிணைப்பாளர் ராஜாராம், உதிரத்துளிகள் மக்கள் சேவை மையத் தலைவர் அசாரூதின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

நாட்டு நலப்பணி கருத்தரங்கம், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடுதல் நடைபெற்றன. மரம் வளர்ப்பின் அவசியம், வீடுதோறும் கழிப்பறை, பொது

இடங்களில் தூய்மை, நெகிழி இல்லா தேசம், மழைநீர் சேமிப்பு ஆகியவற்றை வலியுறுத்தி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கோசமிட்ட ஊர்வலம் நடைபெற்றது. ஆசிரியர் ராஜராம் நன்றி கூறினார்.

Related Stories: