ரேஸ்கோர்ஸ் மைதான நீச்சல்குளத்தின் நீளத்தை அதிகரிக்க பரிந்துரை

மதுரை, செப். 25: ரேஸ்கோர்ஸ் மைதான நீச்சல்குளத்தின் நீளம் குறைவாக உள்ளதால் வீரர்களின் வெற்றி வாய்ப்பு பறி போகும் அபாயத்தால் குளத்தின் நீளத்தை அதிகரிக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் அமைக்கப்படும் நீச்சல்குளங்கள் பெரும்பாலும் 50 மீட்டர் நீளம் உடையவையாக இருக்கும். தமிழகத்திலும் பெரும்பாலான விளையாட்டு ஆணைய நீச்சல் குளங்கள் 50 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளன. ஆனால், மதுரை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள நீச்சல் குளம் 25 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. இந்த குளத்தின் நீளத்தை 50 மீட்டராக அதிகரிக்க அரசுக்கு விளையாட்டு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நீச்சல் குளத்தின் நீளத்தை 50 மீட்டராக்க திட்டமதிப்பீடு தயாரிக்கப்படும். அதன்பின்னர் நிதி ஒதுக்கப்பட்டு, நீளம் அதிகரிக்கும் பணிதுவங்கும்’ என்றார்.நீச்சல் வீரர்கள் சிலர் கூறுகையில், ‘குளத்தின் நீளத்தை 50 மீட்டராக அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. போட்டியின்போது பலமுறை நீச்சல்குள சுவற்றில் கால்களை பதித்து டைவ் செய்து திரும்ப வேண்டும். இதில், சில மணித்துளிகளில் வெற்றி வாய்ப்பை பறி கொடுக்க நேரிடுகிறது’ என்றனர்.

Related Stories: