தொடர்ந்து கலைந்து சென்றனர். போதிய விலை கிடைக்காததால் புருக்கோலியுடன் கலெக்டரிடம் முறையிட்ட விவசாயி

ஊட்டி,  செப். 21: நீலகிரியில் விளைவிக்கப்படும் சைனீஸ் காய்கறியான புருக்கோலிக்கு  போதிய விலை கிடைப்பதில்லை எனக்கூறி விவசாயி ஒருவர் குறைதீர்க்கும்  கூட்டத்தில் புருக்கோலியுடன் கலெக்டரிடம் புகார் தெரிவித்தார்.  நீலகிரி  மாவட்டத்தில் தற்போது ஏராளமான விவசாயிகள், சைனீஷ் வகை காய்கறிகளை  பயிரிட்டு வருகின்றனர். மலை காய்கறிகளுக்கு போதிய விலை கிைடக்காத  போதிலும், ைசனீஷ் வகை காய்கறிகளுக்கு எப்போதும் விலை அதிகமாக கிடைத்து  வருவதால், இதனை ஆர்வமுடன் பயிரிட்டு வருகின்றனர். நீலகிரி  மாவட்டத்தில் எப்பநாடு, அணிக்கொைர, சின்னக்குன்னர், தும்மனட்டி, மோரிக்கல்,  கல்லட்டி, கோடப்பமந்து, கெந்தோரை, கடநாடு மற்றும் இதனை சுற்றியுள்ள  கிராமங்களில் தற்போது சைனீஷ் வகை காய்கறிகளான சுக்கினி, செல்லாரி,  புருக்கோலி, சைனீஷ் கேபேஜ் உட்பட பல்வேறு வகையான காய்கறிகளை பயிரிட்டு  வருகின்றனர். எப்போதும் சீரான விலை இந்த காய்கறிகளுக்கு கிடைத்து வந்த  நிலையில், கடந்த ஒரு வார காலமாக புருக்கோலி விலை மட்டும் சரிந்துள்ளது.  

 சாதாரணமாக  கிலோ ஒன்று ரூ.50 வரை விற்கப்படும் நிலையில், கடந்த சில நாட்களாக கிலோ  ரூ.20 முதல் 30 வரை மட்டுமே விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  இந்நிலையில், நேற்று ஊட்டியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  நடந்தது. கூட்டத்திற்கு வந்த விவசாயி பிரகாஷ், தனது தோட்டத்தில் விளைந்த  புருக்கோலியை எடுத்து வந்து, உரிய விலை கிடைக்காததால் நஷ்டம்  ஏற்பட்டுள்ளது. எனவே, பலருக்கும் தற்போது இலவசமாக கொடுத்து வருகிறேன், விலை  கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட்  திவ்யாவிடமும் தனது  தோட்டத்தில் விலைளந்த புருக்கோலியை கொடுத்தார். இதனை  வாங்கி கொண்ட கலெக்டர் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஊட்டி, செப். 21: நீலகிரி மாவட்டத்தில் தற்போது மழை ஓய்ந்த நிலையில், நீர் பனி தாக்கம் அதிகரித்துள்ளதால், மாலை நேரங்களில் கடும் குளிரால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.  

 நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். தொடர்ந்து இரு மாதங்களுக்கு பின்னர், மீண்டும் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை பெய்யும்.  மாவட்டத்தில் செப்டம்பர் மாதம் இறுதியில் நீர்பனி விழத்துவங்கும். தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் உறைபனியின் தாக்கம் அதிகமாக காணப்படும்.  இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து மூன்று மாதம் நல்ல மழை பதிவானது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நீர் பனி விழுகிறது.

நேற்று முன்தினம் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நீர் பனியின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. இதனால், இரவு நேரங்களில் குளிர் வாட்டுகிறது. இதனால் பணிக்கு செல்பவர்கள், பள்ளி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். நீர் பனி முன்னதாகவே விழும் நிலையில், தேயிலை மற்றும் மலை காய்கறிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: