` ஒருவாரமாக குடிநீர் விநியோகம் இல்லை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் மக்கள் முற்றுகை கந்தர்வகோட்டையில் பரபரப்பு

கந்தர்வகோட்டை, செப். 19:  கந்தர்வகோட்டை யாதவர் தெருவில் ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யாததால் ஊராட்சி ஒனறிய அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.கந்தர்வகோட்டை பகுதியில் போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் வரவில்லை. காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்ணீர் போதிய அளவில் கிடைக்காததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கந்தர்வகோட்டை யாதவர் தெருவில் ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் முறையிட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலி குடங்களுடன் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் தற்போது மேலதிகாரிகள் யாரும் இல்லை. அதிகாரிகள் வந்தவுடன் உங்களது கோரிக்கை குறித்து தெரிவிக்கப்படும் என்று ஊழியர்கள் உறுதியளித்தனர். அதன்பேரில் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: