ஆந்திராவை போல் பெட்ரோல் விலை வர்த்தகர்கள் தீர்மானம்

திண்டுக்கல், செப். 19: திண்டுக்கல்லில் தொழில் வர்த்தகர் சங்க செயற்குழுக் கூட்டம் மாவட்டத்தலைவர் கிருபாகரன் தலைமையில்நடைபெற்றது. பொருளாளர் முகமதுகனி வரவு செலவு கணக்குளை வாசித்தார். அந்நியநாட்டு நிறுவனங்களான வால்மார்ட், பிளிப்கார்ட் முதலிய நிறுவனங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் இந்திய வணிகத்தில் நுழைவைதைத் தடுக்க வரும் 28ம் தேதி கடையடைப்புப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்கவும் ஜிஎஸ்டி.வரி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். தமிழக அரசு பெட்ரோல் டீசல் மீது விதிக்கப்பட்ட வரியை ஆந்திரா அரசு போல லிட்டர்க்கு ரூ.5 குறைக்க வேண்டும்.

மதுரை-சென்னை இருவழிப்பாதையாக மாற்றியதால் கூடுதலாக பகல்நேர விரைவு ரயில் சென்னைக்கும், பெங்களூருக்கும் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூடுதல் செயலாளர் நசீர்சேட் நன்றி கூறினார்.

Related Stories: