நீராறு அணையில் படகு இல்லம் அமைக்க கோரிக்கை

வால்பாறை, செப்.12: வால்பாறை அருகே உள்ள நீராறு அணையில் படகு இல்லம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனா்.

வால்பாறை வரும் சுற்றுலாப்பயணிள் ஆழியார், டாப்சிலிப், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை மையமாக வைத்து 3 நாட்கள் வரை தங்கி இயற்கை சூழலை ரசித்து செல்வது வழக்கம். மேலும் வால்பாறையில் வன விலங்கு ஆர்வலர்கள், பறவை ஆர்வலர்கள் என, வால்பாறையில் மக்கள் வலம் வருவதை காண முடியும். மேலும் வால்பாறை பகுதியில் ஏழை தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. அவர்களையும், அவர்களது குழந்தைகளையும் மன மகிழ்ச்சியடைய செய்ய வால்பாறை பகுதியில் பொழுது போக்க தியேட்டர் மற்றும் பூங்கா உள்ளிட்ட வசதிகள் கிடையாது.
Advertising
Advertising

இந்நிலையில் பூங்கா மற்றும் படகு இல்லம் இருந்தால் வரும் சுற்றுலாப்பயணிகள் மனநிறைவுடன் திரும்பி செல்ல ஏதுவாக அமையும். எனவே வால்பாறையில் தேக்கடி போல, எழில் கொஞ்சும், 365 நாட்களும் சீரான நிலையில் நீர் தேங்கும் கீழ் நீராறு அணையில் படகு இல்லம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும், துரிதமாக  பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்து உள்ளனர்.

Related Stories: