அரியலூர் வீரமா காளியம்மன் கோயிலில் அம்மன் ஏகாந்த சேவை

அரியலூர்,ஆக,14: அரியலூர்-பெரம்பலூர் சாலையில் காளியம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள வீரமா காளியம்மன் கோயில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. காலையில் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்தனர். மேலும் அம்மனுக்கு தயிர், சந்தனம் போன்ற 13 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை சுவாமி அரியலூர் முக்கிய வீதிகள்  காளியம்மன் கோயில்தெரு, ரயில்வே கேட், பென்னிஹவுஸ் தெரு, பெரியகடை வீதி, சத்திரம் ஆகிய வழியாக வந்து கோயிலை வந்தடைந்தன. இந்நிகழ்சியில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர். இதனையடுத்து மறுநாள் பக்தர்கள் அனைவரும் ஊராணியில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையல் செய்து அன்னதானம் செய்தனர். இதனையடுத்து விழாவின் இறுதியில் வீரமா காளியம்மன்  ஏகாந்த சேவை நடைபெற்றது. இவ்விழாவில் பக்தர்கள் பூக்களால் கோயிலை அலங்காரித்து அம்மனை அலங்காரம் செய்து அம்மனை ஊஞ்சலில் ஏகாந்தமாக அம்மன் இருப்பதை பக்தர்கள் தரிசனம் செய்து அம்மன் துதிபாடல்களை பாடினர்.

Related Stories: