மாநகராட்சி கூட்டுறவு தேர்தல் அனைத்து பணியாளர் கூட்டமைப்பு அணி வெற்றி

மதுரை, ஆக.14: மதுரை மாநகராட்சி கூட்டுறவு சங்க தேர்தலில் மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்பு அணி வெற்றி பெற்றது.

‘மதுரை மாநகராட்சி அலுவலர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் இயங்கி வருகிறது. இச்சங்கத்தில் தலைவர், துணை தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. தேர்தல் அதிகாரியாக மணிமாறன் செயல்பட்டார்.

இத்தேர்தலில் மாநகராட்சி அனைத்து பணியாளர்கள் கூட்டமைப்பு சங்க தலைவராக உள்ள முனியசாமி அணியினர் போட்டியிட்டனர். அந்த வகையில் தலைவர் பதவிக்கு கண்ணன், துணைத்தலைவர் பதவிக்கு ராஜகோபால் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட்டனர். போட்டியிட்ட கூட்டமைப்பு அணியின் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி மணிமாறன் வழங்கினார்.

Related Stories: