உத்திரமேரூர் சுற்றுப்பகுதிகளில் பைக் திருடி விற்கும் கும்பல் கைது: 4 மொபட், ஒரு பைக் பறிமுதல்

உத்திரமேரூர், ஆக. 13: உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பைக்குகளை திருடி விற்கும் கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 மொபட் மற்றும் ஒரு பைக்கை பறிமுதல் செய்யப்பட்டது.உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி, காரனை மண்டபம், கண்டிகை, களியாம்பூண்டி பெருநகர் மற்றும் அதன் சுற்றுவாட்டாரப்பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடுபோனது.  இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையங்களில் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

இதையடுத்து பெருநகர் போலீசார் பைக் திருடும் நபர்களை பிடிக்க  உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் தலைமயில் தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இந்நிலையில், தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மானாமதி கண்டிகையை சேர்ந்தவர் ஜாக் (எ) ஜாக்சன் (26) அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை நடத்தியதில் ஜாக்சன், தனது நண்பரான அதே கிராமத்தை சேர்ந்த சங்கர் (எ) செபாஸ்டின் (32). ஆகிய இருவரும் சேர்ந்து மேற்கண்ட பகுதிகளில் பைக்களை திடுடி அதனை காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அசரப் அலி (26) என்பவரிடம் விற்று வந்தது தெரியவந்தது.அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் அசரப் அலியையும் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் திருட்டு பைக்குகளை வாங்கி சென்னையில் உள்ள பழைய பைக் உதிரிபாகம் விற்கும் இடத்தில் விற்று வந்தது தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். மேலும், 4 மொபட் , ஒரு பைக்கை பறிமுதல் செய்தனர்.

Related Stories: