வேலூர் மாவட்டத்தில் 2ம் நிலை காவலருக்கான போட்டி தேர்வில் 1,800 பேர் தேர்ச்சி விரைவில் உடற்தகுதி தேர்வு நடக்கிறது

வேலூர், ஆக.13: வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற 2ம் நிலை காவலருக்கான போட்டித்தேர்வில் 1,800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விரைவில் உடற்தகுதி தேர்வு நடக்க உள்ளது. தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு குழுமம் மூலம் காவல்துறையில் ஆயுதப்படை பிரிவில் 5 ஆயிரத்து 538 காலி பணியிடத்திற்கு 2ம் நிலை காவலர்கள், சிறைத்துறையில் 340 பேர், 2ம் நிலை சிறைக்காவலர்கள், தீயணைப்பு துறையில் 216 பேர் உட்பட மொத்தம் 6 ஆயிரத்து 140 பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.

அதையொட்டி இதற்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி முதல் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி வரை இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு வந்தது. இதற்கான போட்டித்தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி நடந்தது. இதன் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது.வேலூர் மாவட்டத்தில் இப்போட்டி தேர்வுக்காக 13,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 1,800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். விரைவில் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: