கோட்டூரில் சுயஉதவி குழுவினருக்கு தொழில் பயிற்சி முகாம்

பாபநாசம், ஜூன் 21:  பாபநாசம் விவேகானந்தா சமூக கல்விச் சங்கம் சார்பில் பாபநாசம் அருகே களஞ்சேரி கோட்டூரில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வருவாய் ஈட்டும் தொழில் வாய்ப்புகள் பற்றிய முகாம் நடை பெற்றது. பாண்டியராஜன் தலைமை வகித்தார். சிவக்குமார், முருகேசன் முன்னிலை வகித்தனர். முன்னதாக களப்பணியாளர் மகாலெட்சுமி வரவேற்றார்.

கருத்தரங்கில் விவசாயம் சார்புடைய தொழில்களான நர்சரி தோட்டம் அமைத்தல், ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம் மூலம் ஆடு, மாடு, நாட்டுக்கோழி வளர்ப்பு, பசுங்கன்று வளர்ப்பு, இயற்கை உரமான மண் புழு உரம், பஞ்சக் காவியம், மூலிகைத் தோட்டம் உள்ளிட்டவற்றின் மூலம் வருமானம் ஈட்டும் வழிமுறை குறித்து பயிற்றுநர் பவானி பயிற்சியளித்தார். மகளிர்குழு நிர்வாகிகள் உஷா ராணி, கௌசல்யா பேசினர். ஏராளமான மகளிர் குழு நிர்வாகிகள் பங்கேற்றனர். சிவகாமி நன்றி கூறினார்.

Related Stories: