மயிலாடுதுறை, ஜூன் 21: முத்துப்பேட்டை ஆசாத் நகரில் உள்ள மீன் மார்க்கெட், போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக கூறி உண்ணாவிரதம் இருக்க பாஜகவினர் முயற்சித்தனர், மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் எச்.ராஜா கலந்து கொள்ள இருப்பதாக பாஜகவினர் கூடினர். இதற்கிடையே போலீசார், கருப்பு முருகானந்தம் மற்றும் மாவட்ட தலைவர் சிவாவை கைது செய்ததுடன் உண்ணாவிரதம் இருக்க வந்தவர்களையும் கைது செய்தனர்.