வேளாண்துறையால் வழங்கும் விதை உளுந்து தனியாரில் வாங்கும் விலையை விட அதிகமாக உள்ளது

தரங்கம்பாடி, ஜூன் 21: வேளாண்துறையால் வழங்கப்படும் விதை உளுந்து, தனியாரில் வாங்கும் விலையை விட அதிகமாக உள்ளது என்று தரங்கம்பாடியில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றஞ்சாட்டினர்.தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. தாசில்தார் தர் தலைமையில் நடந்தது. மண்டல துணை தாசில்தார் மகேந்திரன், உதவி வேளாண் அலுவலர் உமாபசுபதி மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் விவசாயிகள் தில்லையாடியை சேர்ந்த ராஜேந்திரன், கருணாநிதி, காழியப்பநல்லூர் அருள்தாஸ் ஆகியோர் பேசியதாவது: விவசாயிகளுக்கு வேளாண்துறையால் வழங்கப்படும் விதைகள் உரிய காலத்தில் வழங்கப்படுவதில்லை. விதைகள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தால் விவசாயிகள் தனியாரிடம் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இனிவரும் காலங்களிலாவது விதைகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும். வேளாண்துறையால் வழங்கப்படும் விதை உளுந்து, தனியார் விலையை விட அதிகமாக உள்ளது. எனவே விதை உளுந்துகளின் விலையை அரசு குறைக்க வேண்டும். தில்லையாடி, காழியப்பநல்லூர் பகுதிகளில் வடிகால் மற்றும் பாசனத்துக்கு பயன்படும் சிறுவாய்க்கால்களை தூர்வார வேண்டும். அதேபோல் மகிமலை ஆற்றையும் தூர்வார வேண்டும் என்றனர்.

விவசாயி அறுபாதி குருசாமி பேசும்போது: 30 ஆண்டுகளாக தூர்வாராமல் கிடக்கும் ஆறுபாதி பழங்காவிரியை தூர்வாரி பாசனத்துக்கு பயன்படுமாறு செய்ய வேண்டும் என்றார்.கூட்டத்தில் விவசாயிகள் பேசும்போது:50 சதவீத மானியத்தில் வழங்கப்படும் பைப்புகளை சிங்கானோடையில் தனியார் ஒருவர் விலைக்கு விற்று வருகிறார். 20 அடி நீளமுள்ள ஒரு பைப்பை ரூ.1,000 வீதம் 10 பைப்புகளை விற்பனை செய்கிறார்.\அவர் மீது வேளாண்துறை நடவடிக்கை எடுக்குமா என்றனர். இதற்கு பதிலளித்து உதவி வேளாண் அலுவலர் பேசுகையில், இதுகுறித்து வேளாண் உதவி இயக்குனருக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 50 சதவீத மானியத்தில் வழங்கப்படும்  பைப்புகளை சிங்கானோடையில் தனியார் ஒருவர் விலைக்கு விற்று வருகிறார். 20  அடி நீளமுள்ள ஒரு பைப்பை ரூ.1,000 வீதம் 10 பைப்புகளை விற்பனை செய்கிறார்.  அவர் மீது வேளாண்துறை நடவடிக்கை எடுக்குமா என்றனர்.

Related Stories: