நாகப்பட்டினம் பகுதியில் நடந்து வரும் சாலை பணிகள்: நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு

நாகப்பட்டினம், மே 16: நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடந்து வரும் அனைத்து பணிகளின் தரம் மற்றும் கட்டுமானங்கள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் உள்தணிக்கை செய்ய வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டார்.

அதன்படி நடப்பு ஆண்டிற்கான தணிக்கை நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சாலை பணிகளை ஆய்வு செய்யப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை மதுரை வட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் தலைமையில் ஆண்டிபந்தல் திருமருகல் சாலையில் நடந்த சாலை அகலப்படுத்தும் பணியின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் சேதுபதி, நாகப்பட்டினம் நெடுஞ்சாலைதுறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர் நாகராஜ், உதவிக்கோட்ட பொறியாளர்கள் வீரமணி, விவேகானந்தன், சுரேஷ், அண்ணாத்துரை மற்றும் நாகப்பட்டினம் நெடுஞ்சாலைதுறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவிப்பொறியாளர்கள் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

The post நாகப்பட்டினம் பகுதியில் நடந்து வரும் சாலை பணிகள்: நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: