திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் நீரொழிங்கிகள் மூலம் குடிநீர் ஆதாரம் பெருக்க நடவடிக்கை

மயிலாடுதுறை, மே 16: மயிலாடுதுறை மாவட்டம் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் ஆதனூர்- குமாரமங்கலம் கதவணை மற்றும் நரிமுடுக்கு வாய்க்கால் நீரொழிங்கி, தெற்கு ராஜன் வாய்க்கால் நீரொழிங்கி பணிகள் மூலம் குடிநீர் ஆதாரங்களை பெருக்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை வட்டம் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் ஆதனூர்-குமாராமங்கலம் கதவணை மற்றும் நரிமுடுக்கு வாய்க்கால் நீரொழிங்கி மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால் நீரொழிங்கி பணிகள் வழியாக குடிநீர் ஆதாரங்களை பெருக்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, குடிநீர் திட்ட பணிகள் வழியாக நிலத்தடி நீர்மட்டம் உயரும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தினார்.

இதில் நீர்வளத்துறை செயற்பொறியாளர் (சிறப்பு திட்டங்கள்) பாலமுருகன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் மாரிமுத்து, உதவி செயற்பொறியாளர்கள் (சிறப்பு திட்டங்கள்) மருதமுத்து, ஆறுமுகம்,கண்ணன், முருகேசன், வட்டாட்சியர் விஜயராணி ஆகியோர் உடன் இருந்தனர்.

The post திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் நீரொழிங்கிகள் மூலம் குடிநீர் ஆதாரம் பெருக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: