பள்ளி- கல்லூரிகளில் கட்டண கொள்ளையை தடுக்க கோர மனித பாதுகாப்பு கழகம் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், ஜூன் 20: பள்ளி, கல்லூரிகளில் கட்டண கொள்ளையை கண்டித்து மனித பாதுகாப்பு கழகம் சார்பில் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

  தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டண கொள்ளையை தடுக்க அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். அரசு ஆசிரியர்கள் கல்வியை வியாபாரமாக்கும் வகையில் டியூசன் சென்டர் என்ற பெயரில் தனியாக அதிக கட்டணம் வசூலித்து மாணவர்களின் மன அழுத்தத்திற்கு காரணமாகின்றனர். டியூசனில் எடுக்கின்ற பாடங்களை பள்ளியிலேயே மாணவர்களுக்கு பயிற்றுவிக்க மாநில கல்வித்துறையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு வேலைகளில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்த மாணவ மாணவியருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், நெடுஞ்சாலைகளில் ஆக்ரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உலக ஐக்கிய மனித பாதுகாப்பு கழகம் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் ஜெய்மோகன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். நெல்லை மாவட்ட தலைவர் வெங்கடேஷ், மாவட்ட செயலாளர் ஜாண் பிரைட், மாவட்ட இணை செயலாளர் ராமசாமி பிள்ளை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜேசுதாஸ், நகர தலைவர் ஜேசுதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: