கல்வராயன்மலையில் ₹1.40 கோடியில் சாலை, கிணறு வெட்டும் பணிகள்-உதயசூரியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

சின்னசேலம் : கல்வராயன்மலையில் ரூ.1.40 கோடி மதிப்பில் தார் சாலை அமைத்தல், கிணறு வெட்டும் பணிகளை உதயசூரியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.கல்வராயன்மலையில் உள்ள கரியாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட குறத்தி குன்றம்  கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ.8.5 லட்சம் மதிப்பில்  கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை உதயசூரியன் எம்எல்ஏ திறந்து வைத்தார். பின்னர் தாழ்சாத்தனூர்  முதல் தாய்மொழிப்பட்டு வரை ரூ.96 லட்சம் மதிப்பில்   தார்சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். மேலும் கொட்டபுத்தூர்,  தொரடிப்பட்டு பகுதிகளில் ரூ.36 லட்சம் மதிப்பில் இரண்டு குடிநீர் கிணறு  வெட்டும் பணியை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில் உதவி செயற்பொறியாளர் இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர்  ஜெயராமன், ஒன்றிய பொறியாளர்கள் அருண்ராஜா, அருண்பிரசாத், அசோக்காந்த்,  ஒன்றிய செயலாளர்கள் சின்னதம்பி, கிருஷ்ணன், முன்னாள் சேர்மன் சந்திரன், நிர்வாகிகள் ரத்தினம், வெங்கடேசன், லட்சுமணன், ரபீக், பெருமாள் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர். முன்னதாக ரேஷன் கடையில்  உதயசூரியன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். அப்போது மக்களுக்கு அனைத்து  பொருட்களும் சரியான அளவில் வழங்க வேண்டும் என்றும், மக்கள் சமூக இடைவெளியை  கடைபிடித்தும், முக கவசம் அணிந்தும் வர வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.  …

The post கல்வராயன்மலையில் ₹1.40 கோடியில் சாலை, கிணறு வெட்டும் பணிகள்-உதயசூரியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: