சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து, சவுதி அரேபியாவுக்கு கூடுதல் விமான சேவைகள்: பயணிகள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து மற்றும் சவுதி அரேபியாவுக்கும், உள்நாட்டு முனையத்தில் துர்காப்பூருக்கும் இடையே கூடுதல் விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பயணிகளின் வசதிக்காக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நிறுவனம், சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக் நகருக்கும், பாங்காக்கிலிருந்து சென்னைக்கும் 2 விமான சேவைகளை புதிதாக கடந்த 15ம் தேதியில் இருந்து இயக்கத் தொடங்கியுள்ளது. இந்த விமான சேவைகள் வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படுகின்றன.

அதேபோல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், சென்னையில் இருந்து சவுதி அரேபியாவின் தமாமிற்கும், தாமாமில் இருந்து சென்னைக்கும் இடையே 2 விமான சேவைகளை வரும் ஜூன் மாதம் 1ம் தேதியில் இருந்து புதிதாக இயக்கத் தொடங்குகிறது. இந்த விமான சேவைகள் வாரத்தில் 2 நாட்கள் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் நேரடி விமானமாக இயக்கப்படுகிறது. மேலும் சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், மேற்குவங்க மாநிலம் துர்காப்பூருக்கும், அதைப்போல் துர்காப்பூரிலிருந்து சென்னைக்கும் புதிதாக நேரடி விமான சேவை, கடந்த 16ம் தேதியிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.

The post சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து, சவுதி அரேபியாவுக்கு கூடுதல் விமான சேவைகள்: பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: