இலவச பேருந்து திட்டத்தை கொச்சைப்படுத்துவதா? பிரதமர் மோடிக்கு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி கண்டனம்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: மெட்ரோ ரயில் நிலையம் செல்வதற்கு கூட, பேருந்து அவசியமாகிறது. இதைத் தாண்டி சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடுதலாகி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. எனவே இலவச பேருந்து சேவை மகளிருக்கு வழங்கியதன் மூலம் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது என்று மோடி கூறுவது அப்பட்டமான பொய்யாகும். சென்னை 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பைசா கூட ஒதுக்காத மோடி மெட்ரோ ரயில் திட்டம் பாதிப்பதாக கூறுவது நகைப்பின் உச்சமாகும்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு கட்டத்திலும் தோல்வியின் ஆழத்தை உணர்ந்து கொண்ட மோடி, நிலை தடுமாறி, என்ன பேசுகிறோம் என்று அறியாமல் பேசிக் கொண்டிருக்கிறார். இப்போது பெண்களுக்கான இலவசப் பேருந்து திட்டத்தின் மூலம் மெட்ரோ ரயில் திட்டம் பாதிப்படைவதாக கூறுகிறார். இது விரக்தியின் உச்ச வெளிப்பாடாகும். எது எப்படி இருந்தாலும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று, பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post இலவச பேருந்து திட்டத்தை கொச்சைப்படுத்துவதா? பிரதமர் மோடிக்கு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: