பீகார் மாநிலத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில் தற்போதைய நிலைமை குறித்து ஆளுநரிடம் கேட்டறிந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி: பீகார் மாநிலத்தில் வன்முறை ஏற்பட்ட நிலையில் தற்போதைய நிலைமை குறித்து ஆளுநரிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார்.பீகாரில் பதற்றமான சூழலை கட்டுக்குள் கொண்டுவர துணை ராணுவ படையினரை உள்துறை அமைச்சகம் அனுப்புகிறது. ஏற்கெனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்பட்டு வரும்நிலையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  ராமநவமியையொட்டி நாலந்தா, சசாரம் ஆகிய மாவட்டங்களில் இரு தரப்பினரிடையேயான மோதல் வன்முறையில் முடிந்தது. வன்முறையில் ஒருவர் உயிரிழந்தநிலையில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி இதுவரை 80 பேரை கைது செய்துள்ளனர்.

Related Stories: