வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவமும், கொலையும் அதிகரித்துள்ளது. . தூத்துக்குடி வழக்கறிஞர், அரியலூர் வழக்கறிஞர், தருமபுரி வழக்கறிஞர் ஆகியோர் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இப்போது சென்னை பெருங்குடி வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த வழக்கறிஞர்களும் பாதுகாப்பற்ற தன்மை இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே தமிழ்நாடு அரசு வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும்.

Related Stories: