லட்சக்கணக்கான மாணவர்களின் வேலையிழப்புக்கு ஆளுநரே காரணம்: துரை வைகோ குற்றச்சாட்டு

கடலூர்: மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கடலூரில் நேற்று அளித்த பேட்டி: தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, இந்திய அரசியல் சாசன கட்டமைப்பை மீறும் வகையில் அரசியல் சித்தாந்தம் பேசி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டு காலமாக தமிழ்நாடு பல்கலைக்கழகங்களை சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களது கல்லூரி இறுதி ஆண்டு படித்த முடித்த நிலையில், தகுதி சான்றிதழை பெற முடியாமல், இதனால் வேலை வாய்ப்பு இழந்து தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மதிமுக மாணவர்களின் நலனுக்காக தீவிரமாக போராட்ட களத்தில் இறங்கும். நீதிமன்றத்தையும் நாடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: