புதுடெல்லி: ‘‘இந்தியா ஜனநாயகத்தின் தாய்” என்று பிரதமர் மோடி ஜனநாயக நாடுகளின் உச்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாடுகளின் 2023ம் ஆண்டுக்கான உச்சிமாநாடு வீடியோகான்பரன்சிங்கில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: இந்திய அரசின் ஒவ்வொரு முயற்சியும் இந்திய குடிமக்களின் கூட்டு முயற்சியினால் இயக்கப்படுகின்றது. பல உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இருக்கின்றது. இதுவே ஜனநாயகத்திற்கான மற்றும் உலகத்திற்கான சிறந்த விளம்பரமாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் கருத்து என்பது உலகின் பிற பகுதிகளுக்கு முன்பே பண்டைய இந்தியாவில் ஒரு பொதுவான அம்சமாகும்.