தீர்ப்பில் குளறுபடிகள் உள்ளன ஓபிஎஸ்சுக்கு நீதி கிடைக்கும்: புகழேந்தி பேட்டி

ஓசூர்: ‘தீர்ப்பில் குளறுபடிகள் உள்ளன. ஓபிஎஸ்சுக்கு நீதி கிடைக்கும்’ என புகழேந்தி கூறினார். அதிமுக ஓபிஎஸ் தரப்பு கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, ஓசூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாடே எதிர்பார்த்த தீர்ப்பை, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. பொதுச்செயலாளர் ஆகிவிடலாம் என்ற ஆர்வத்தின் கோளாறு காரணமாக, என்ன தீர்ப்பு வந்துள்ளது என்பதை முழுவதுமாக படிக்காமல் கொண்டாடினார்கள். தீர்ப்பு கைக்கு வந்த பின்னால் தெரிகிறது தெளிவாக புரிகிறது. இதே தீர்ப்பில் 66வது பத்தியில் 6வது விதியின்படி 7 நாட்களுக்குள் கட்சியை விட்டு நீக்குவதற்கு முன்னால், நீக்கப்படுபவர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை இருப்பதாக நோட்டீஸ் கொடுத்து இருக்க வேண்டும்.

அந்த நடைமுறையை பின்பற்றவில்லை. தீர்ப்பில் நிலுவையில் உள்ள சிவில் மெயின் வழக்கில் முடிவெடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 1.55 கோடி உறுப்பினர்கள் மீது கொண்டுள்ள அக்கறையால், பொதுச்செயலாளர் பதவி தொடரலாம் என கூறப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் 5 வருட காலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருத்தவோ மாற்றவோ முடியாத விதியின்படி, ஒருங்கிணைப்பாளர் பதவியை பற்றி தீர்ப்பில் கூறப்படவில்லை. இப்படிப்பட்ட தீர்ப்பில் உள்ள குளறுபடிளை எல்லாம் எங்களது வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டில் எடுத்து வைப்பார்கள், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்க்கு நீதி கிடைக்கும். இவ்வாறு புகழேந்தி கூறினார்.

Related Stories: