கேரளாவில் பெண்கள் வேடத்தில் ஆண்கள் பங்கேற்கும் வினோத திருவிழா: கொல்லம் அருகே கொட்டம்குளக்கரா தேவி கோயிலில் வழிபாடு

திருவானந்தபுரம்: கேரளாவின் கொல்லம் அருகே பெண்க வேடமிட்ட ஆண்கள் பங்கேற்ற வினோத திருவிழா விமர்சியாக நடைபெற்றது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டம்குளக்கரா தேவி கோயிலில் ஆண்டுதோறும் மலையாள மீனம் மாதத்தில் சமய விளக்கு திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் வேடமிட்டு பங்கேற்பர். மகளிர் வேடமிட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதன் மூலம் செல்வம் பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கை.

மாலை முதலே ஆலயத்து படையெடுக்கும் ஆண்கள் கோயிலில் விற்கப்படும் 5 முக விளக்கை வாங்கி அதில் தீபம் ஏற்றி இரவு முழுவதும் கோயிலை சுற்றி வந்து வழிபடுவது வாடிக்கை. ஆண்களுக்கு ஒப்பனை செய்வதற்காகவே பல ஒப்பனை கலைஞர்கள் கோயில் வாசலில் உள்ளனர். அவர்களிடம் ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்கள் மிகவும் உற்சாகமாக இந்த பூஜையில் கலந்து கொள்கின்றனர். சிறந்த ஒப்பனை செய்த ஆண்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

முன்பெரும் காலத்தில் கோயில் அமைந்துள்ள பகுதிகளில் மேச்சலுக்கு சென்ற சிறுவர்கள் ஒரு கல்லில் தேங்காய் உடைத்தபோது அதில் இருந்து குருதி வழிந்ததாகவும் இது குறித்து ஊர் மக்கள் ஜோதிடரிடம் கேட்டபோது அது கல் அல்ல வானதுர்கா என்று தெரிவித்துள்ளார். அன்று முதல் அங்கு கோயில் எழுப்பி ஆண்டுதோறும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மூங்கில்களால் கூரை அமைத்து அமைக்கப்பட்ட இந்த கோயில் பின்னர் சிறப்பாக கட்டி முடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் பெண்கள் மட்டுமே வழிபட்டு வந்த நிலையில் கோயிலுக்குள் நுழைய ஆண்கள் பெண் வேடமிட்டு சென்றதால் காலப்போக்கில் அந்த வழக்கமே நிலைத்துவிட்டதாக கூறப்படுகிறது.  

Related Stories: