தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்கு சென்று திரும்பியபோது பேருந்து கவிழ்ந்து விபத்து

கேரளா: கேரள மாநிலம் இலவுங்கல் பகுதியில் தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு சென்று திரும்பிய பக்தர்கள் பேருந்து கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளனர். சபரியில் பங்குனி, அழாட்டு திருவிழாவிற்காக 10 நாட்கள் நடை திறக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கொடியேற்றத்துடன் இந்த நடை திறக்கப்பட்டதிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம்தோறும் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்து வந்தனர்.

தஞ்சாவூர் பகுதியில் இருந்து 64 பேர் கொண்ட குழு பேருந்தில் சபரிமலைக்கு வந்தடைந்து. இன்று காலை ஐயப்பனை தரிசனம் செய்து பின்னர் வீடு திரும்பும் நிலையில் இலவுங்கல் என்ற இடத்தில் உள்ள வளைவில் திரும்பும் போது பெரிய பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது, இந்த பேருந்தில் பெண்கள், குழந்தைகள் பயணித்தநிலையில் அவர்களுக்கு கை, கால்கள் அதிகளவில் முறிந்துருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரையும் பத்தனம்திட்டா அரசு மருத்துவமனைக்கும்,  கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் செல்போன் டவர் சரியாக கிடைக்காத நிலையில் தீயணைப்பு துறையினருக்கும், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் தகவல் தாமதமாகவே  கிடைத்தது.

தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து அனைவரையும் மீட்டு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் தூங்கியதால் விபத்து நேர்ந்ததாக விசாரணையில் தெரியவந்தது. மேலும் உயிரிழப்புகள் இல்லாத நிலையில் ஓட்டுநர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோட்டயம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: