ராகுலின் எம்.பி பதவி பறிப்புக்கு காங்கிரசார் எதிர்ப்பு: தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்.. குண்டுக்கட்டாக கைது செய்த போலீஸ்..!!

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றும் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்தும் பட்டுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக சென்று தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். தபால் நிலையத்திற்குள் உள்ளே போக முயன்றபோது அவர்களை போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து தடுத்து நிறுத்தினர்.

போலீசாருக்கும், போராட்ட காரருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் நகலை எரித்ததால் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சியினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்றும் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் வேன்களில் ஏற்றப்பட்டு பட்டுக்கோட்டை அடுத்த ஆலங்குடி மூலைக்கு கொண்டு சென்றனர். அங்கு தனியார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர்.

Related Stories: